I, my, myself- எப்படி பயன்படுத்துவது?

Report Print Fathima Fathima in கல்வி

ஆங்கிலத்தில் உரையாடும் போது me, mine, I, my, myself போன்ற வார்த்தைகளை எப்போது எப்படி பயன்படுத்தலாம் என்பதை பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.

I அல்லது Me

இந்த இரண்டில் ஒன்றைப் பயன்படுத்த வேண்டுமென்றால் Subject ஆக இருந்தால் I என்பதையும், Object ஆக இருந்தால் me என்பதையும் பயன்படுத்துங்கள்.

I gave Ram a computer.

Ram gave me a computer.

Gopu and I made a suggestion.

Subject- ஒரு செயலைச் செய்யும் நபர், Object- அந்தச் செயலுக்கான விளைவைப் பெறும் அல்லது உள்வாங்கும் நபர்.

My, Mine

My, mine ஆகிய இரண்டில் தொடர்புள்ள வார்த்தைக்கு முன்னால் என்றால் My என்பதைப் பயன்படுத்துங்கள். தொடர்புள்ள வார்த்தைக்குப் பின்னால் என்றால் mine என்பதைப் பயன்படுத்தவும்.

Murali is my friend.

Murali is a friend of mine.

This is my cellphone.

This cellphone is mine.

Myself

Subject, Object இரண்டுமே ‘நான்’ என்பதாக இருக்கும்போது myself என்பதைப் பயன்படுத்துகிறோம்.

I hit myself with a stick.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்