ஆசிரியர் உதவியாளர்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது!

Report Print Kalkinn in கல்வி

ஆசிரியர் உதவியாளர்களாக இருந்த காலத்தை ஆசிரியர் சேவை தரம் 3, 2 இல் உள்வாங்கி அவர்களுக்கான சம்பளத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என அகில இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

எமது செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஆசிரியர் உதவியாளர்களாக உள்வாங்கப்பட்டவர்களுக்கு 3 வருடங்கள் பயிற்சி வழங்கப்பட்ட பின்னரே அவர்களுக்கு நியமனம் வழங்கப்படுகின்றது.

ஆனால் ஆசிரியர் உதவியாளர்களாக இருந்த காலப்பகுதி கணக்கில் எடுக்கப்படவில்லை. இது அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்களின் சம்பள நிலுவைக் கொடுப்பனவுகளை வழங்குமாறும், 3 வருடங்களால் குறைத்துக் கணிக்கப்பட்ட தமது சேவைக்காலத்தை, நியமனம் வழங்கப்பட்ட திகதியிலிருந்து கணிக்குமாறும் வடமாகாணக் கல்வி அமைச்சு மற்றும் வடமாகாணசபையும் உரிய நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என வன்னிப் பகுதி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்