பாடசாலை வந்தால் நாளொன்றுக்கு 100 ரூபா! கல்வி அமைச்சின் புதிய திட்டம்

Report Print Murali Murali in கல்வி

வறுமை மற்றும் பிர காரணங்களினால் பாடசாலைக்கு செல்லாத மாணவர்களுக்கு சிறப்பு கொடுப்பனவுகளை வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ள குறித்த திட்டத்தின் ஊடாக, மாணவர்களின் பாடசாலை இடைவிலகலை தடுக்க முடியும் என கல்வி அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த புதிய திட்டத்தின் கீழ் பாடசாலைக்கு வருகைத்தரும் நாள் ஒன்றுக்கு 100 ரூபா வீதம் மாதாந்த கொடுப்பனவை வழங்குவதற்கு உத்தேசித்துள்ளதாகவும், இது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார்.

இந்த திட்டம் தொடர்பிலான யோசனையை அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் இலவச கல்வி முறைமை அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும், 4,52,661 மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை எனவும், அவர்களில் 51,249 பேர் ஒரு நாள் கூட பாடசாலைக்கு செல்லாதவர்கள் எனவும் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கல்வி அமைச்சின் இந்த புதிய திட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்த சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்,

“மாணவர் வரவுக்கு ரூபாய் 100 என்ற இந்த யோசனை அவசியமற்றது. அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள தேர்தலை இலக்காக கொண்டே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், "கல்வியில் சம வாயப்பு மற்றும் பாகுபாடு இன்றி பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படுவது பற்றியே அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers