கவலைகளை மறக்கச் செய்யும் எழுத்துப் பழக்கம்!

Report Print Givitharan Givitharan in கல்வி

பல்வேறு காரணங்களால் கவலைகள் மற்றும் மன உளைச்சலால் அவதிப்படுபவர்களுக்கு எழுத்து பழக்கம் சிறந்த தீர்வாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள மிச்சிக்கன் ஸ்டேட் பல்லைக்கழகத்தினைச் சேர்ந்தவர்கள் மேற்கொண்ட ஆய்விலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

கவலைகள் மற்றும் மன அழுத்தங்கள் என்பன பல நோய்கள் உண்டாவதற்கு வழிவகுக்கின்றன.

எனவே இப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் விளைவாக மருத்துவ ஆலோசனைகள் மற்றும் உளவில் ஆலோசனைகள் என்பன ஓரளவு நிவாரணத்தை தரக்கூடியதாக இருந்து வருகின்றது.

ஆனால் அவற்றினை விடவும் நாள்தோறும் ஐந்து நிமிடங்கள் வரை சிந்தித்து சுயமாக எழுதுவதை கடைப்பிடித்து வந்தால் அது சிறந்த நிவாரணியாக அமையும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

சிந்தித்து எழுத ஆரம்பிக்கும்போது மூளையானது ஏனைய விடயங்களைப் பற்றி சிந்திக்காமல் ஒருமுகப்படுவதே இதற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்