சைட்டம் மருத்துவக் கல்லூரியை மூடுவதில் மருத்துவக் கவுன்சில் தீவிரம்

Report Print Aasim in கல்வி

மாலபே தனியார் மருத்துவப் பல்கலைக்கழகமான சைட்டம் மருத்துவக் கல்லூரியை முற்றாக மூடிவிடும் செயற்பாட்டில் மருத்துவக் கவுன்சில் தீவிரமாக செயற்படத் தொடங்கியுள்ளது.

சைட்டம் மருத்துவப் பல்கலைக்கழகம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, ஐந்து பேர் அடங்கிய குழுவொன்றை நியமித்திருந்தார். குறித்த குழுவின் அறிக்கை நேற்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஐவர் குழுவின் அறிக்கையில் சைட்டம் கல்லூரிக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதை தற்காலிகமாக இடைநிறுத்தவும், கல்லூரியை மீளக்கட்டமைத்து மருத்துவக் கவுன்சிலின் தரநிர்ணயத்துக்கேற்ப மீளச் செயற்படுத்தவும் சிபார்சு செய்யப்பட்டுள்ளது.

சைட்டம் கல்லூரிக்கு மாணவர் சேர்க்கையை இடைநிறுத்தும் பரிந்துரையை ஆதரிக்கும் இலங்கை மருத்துவக் கவுன்சில், அக்கல்லூரியை மீளக்கட்டமைத்து செயற்படுத்துவதை விரும்பவில்லை என்று தெரியவந்துள்ளது.

அதற்குப் பதிலாக கல்லூரி நிரந்தரமாக மூடப்பட வேண்டும் என்பதில் மருத்துவக் கவுன்சில் விடாப்பிடியாக நிற்கின்றது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers