அறிவோம் ஆங்கிலம்: Allow, Permit, Let எங்கு உபயோகிக்க வேண்டும்?

Report Print Meenakshi in கல்வி

Allow, Permit, Let இம்மூன்று வார்த்தைகளுக்கு அனுமதி என்பதே பொருள். ஆனால் இம்மூன்று வார்த்தைகளை வெவ்வேறான இடங்களில் உபயோகிக்கவேண்டும்.

ஒருவர் ஏதேனும் ஒரு செயலை செய்வதை குறிப்பிடும் இடத்தில் நாம் Permit அல்லது Allow-ஐ பயன்படுத்தலாம்.

எடுத்துகாட்டாக, Weather permitting, we will go on a picnic tomorrow எனும் வாக்கியத்திற்கான பொருள், வானிலை அனுமதித்தால் நாம் நாளை சுற்றுலா செல்லலாம் என்பதாகும்.

இது போன்ற இடங்களில் நாம் Permit எனும் சொல்லினையே உபயோகிக்கவேண்டும்.

I would not allow a child to have a TV or a computer in their room இந்த வாக்கியத்திற்கு குழந்தைகளின் அறையில் டி.வி. கம்ப்யூட்டர் போன்றவற்றிற்கு நான் அனுமதி வழங்குவது இல்லை என்பதாகும்.

Allow, Permit இந்த இரண்டு வார்த்தைகளையும் செயலற்ற வாக்கியங்களில் பயன்படுத்தவேண்டும்.

Let எனும் வார்த்தையினை வினையெச்ச வாக்கியங்களில் பயன்படுத்தவேண்டும்.

எடுத்துகாட்டாக, Why don’t you let me go? All my friends are going இதற்கு என் நண்பர்கள் விளையாட செல்கின்றனர், என்னை மட்டும் ஏன் அனுமதிக்கவில்லை? என்பதாகும். இது போன்ற வினையெச்ச வாக்கியங்களில் பயன்படுத்தவேண்டும்.

மேலும் சில எடுத்துகாட்டுகள்,

Photography is permitted for non-commercial use only.

We’re not allowed to put posters on the walls.

We don’t let employees use the office telephone for personal calls.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers