'ஆ' வில் ஆரம்பிக்கும் பழமொழிகளை தெரிந்து கொள்வோம்

Report Print Amirah in கல்வி
92Shares

 • ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும்.
 • ஆகும் காலம் ஆகும், போகும் காலம் போகும்.
 • ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்.
 • ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு!
 • ஆசை வெட்கம் அறியாது.
 • ஆடத் தெரியாத ஆட்டக்காரி மேடை கோணல் என்றாளாம்.
 • ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்; பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும்.
 • ஆடிப் பட்டம் தேடி விதை.
 • ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை பெய்யும்.
 • ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
 • ஆடு நனைகிறதே என்று ஒநாய் அழுமா.
 • ஆட்டுக்கு வால் அளவறிந்து வைத்திருக்கிறது.
 • ஆட்டக்காரி ஆகவில்லை என்பதற்காகத் தோட்டக்காரியைச் சிங்காரித்தது போல.
 • ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
 • ஆத்துக்குப் போயும் வேர்த்து வடிஞ்ச கதையா ஆயிரங்காலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும்.
 • ஆயிரம் தலை கண்டால் ஒரு கோயிலைக் கண்டது போல ஆயிரம் வந்தாலும் அவசரப் படாதே.
 • ஆயிரம் காசு கொடுத்துக் குதிரை வாங்கியவனுக்கு, அரை காசு கொடுத்துச் சீனி வாங்க முடியலையாம்!
 • ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
 • ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.
 • ஆரால் கேடு, வாயால் கேடு.
 • ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
 • ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.
 • ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச் சக்கரை.
 • ஆழமறியாமல் காலை இடாதே.
 • ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலன் தரும்.
 • ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.
 • ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.
 • ஆழம் தெரியாமல் காலை விடாதே.
 • ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.
 • ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
 • ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
 • ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
 • ஆறு கெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.
 • ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
 • ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
 • ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
 • ஆனைக்கும் அடிசறுக்கும். ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
 • ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments