விடுகதைக‌ள் படி‌த்து ரொ‌ம்ப நா‌ட்க‌ள் ஆ‌கி‌வி‌ட்டதா? இதோ வ‌ந்து ‌வி‌ட்டது

Report Print Amirah in கல்வி

விடுகதைக‌ள் எ‌ன்பது வெறு‌ம் ‌விளையா‌ட்ட‌ல்ல நமது ‌சி‌ந்தனைகளு‌க்கு ஒரு ப‌யி‌ற்‌சியு‌ம் ஆகு‌ம்.

அவ்வாறான விடுகதைகள் பின்வருமாறு

 1. இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. அது என்ன? சைக்கிள்
 2. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது அது என்ன? பட்டாசு.
 3. உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம் அது என்ன? தராசு.
 4. ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது அவர்கள் யார்? எறும்புக் கூட்டம்.
 5. உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம் நான் யார்? அஞ்சல் பெட்டி.
 6. அடி மலர்ந்து நுனி மலராத பூ எது? வாழைப்பூ
 7. காகிதத்தைக் கண்டால் கண்ணீர் விடும் அது என்ன? பேனா
 8. காக்கைப் போலக் கருப்பானது, கையால் தொட்டால் ஊதா நிறம், வாயால் மென்றால் நீல நிறம் அது என்ன? நாவல் பழம்
 9. தாடிக்காரன், மீசைக்காரன். கோயிலுக்குப் போனால் வெள்ளைக்காரன் அது என்ன? தேங்காய்
 10. சிவப்புப் பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது அது என்ன? காய்ந்த மிளகாய்
 11. காற்றிலே பறக்கும் கண்ணாடி குண்டு, தொட்டுவிட்டால் பார்க்க முடியாது அது என்ன? நீர்க்குமிழி
 12. ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன? விரல்கள்
 13. ஒற்றைக் காலில் ஒய்யாரமாய் ஆடுவான். ஓய்ந்து விட்டால் படுத்துவிடுவான் அவன் யார்? பம்பரம்
 14. பச்சை வீட்டுக்கு சிவப்பு வாசல் அது என்ன? கிளி
 15. நடைக்கு உதாரணம் சொல்வார்கள். ஆனால் குறுக்கே நடந்தால் சிலருக்கு பிடிக்காது. அது என்ன? பூனை
 16. சின்னத் தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன? தீக்குச்சி
 17. தலை மட்டும் கொண்‌ட சிறகில்லாத பறவை தேசமெல்லாம் சுத்தும்? தபால் தலை
 18. உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான். அவன் யார்? கடல் அலை
 19. காற்று வீசும் அழகான மரம் அது என்ன? சாமரம்
 20. கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பலையும்தான். அது என்ன? வெங்காயம்
 21. எப்போதும் காதருகில் ரகசியம் பேசிக் கொண்டிருப்பவள்? செல்பேசி

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments