மாணவர்களே! இது உங்களுக்கான பரீட்சை வழி காட்டி

Report Print Amirah in கல்வி

எல்லா வினாக்களுக்கும்விடை தருக.

ஒவ்வொரு கூற்றுக்கும்கீழே ஐந்து விடைகள் தரப்பட்டுள்ளன. அவற்றுள் மிகப் பொருத்தமான விடையைத் தெரிவு செய்க

01)உதட்டுப்பல்ஒலியாக அமைவது

1. வ் 2.ட் 3. ண் 4. ழ் 5. ள்

02) 'எகர' உயிர்வேறுபட்டு ஒலிப்பது

1. எட்டு 2.எளிமை 3. எறும்பு 4. எருது 5.எள்ளு

03)உடனிலையாகவும்வேற்றுநிலையாகவும் மயங்கும் மெய்யெழுத்துக்களின் எண்ணிக்கை

1. 4 2.2 3. 12 4. 10 5. 8

04) பகாப்பதமாகஅமைந்த சொல்

1. பட்டம் 2.கொலை3. கல்வி 4.கொடை 5. பாடுதல்

05) தற்பவமாக அமையத்தக்கது

1. கமலம் 2.குங்குமம் 3. காரணம் 4. அபாயம் 5. பாக்கியம்

06) வேற்றுமைத்தொகையாக அமையும் சொல்

1. தண்ணீர் 2.செந்நீர் 3. கண்ணீர் 4. சுடுநீர் 5. பன்னீர்

07) குறிப்பு வினையாலணையும்பெயராக அமைவது

1. ஓடியவனை

2. படித்தவருக்கு

3. கண்டவனால்

4. நல்லவரோடு

5. பாடியவரது

08) செயப்பாட்டுவினை விகுதிகளாக வருவன,

1. வி, பி 2.படு, உண் 3. க, இய 4. ஆய், ஈர் 5.ஆன், ஆர்

09) “போ” என்றவினையைத் துணைவினையாகக் கொண்ட தொகுதி

1. வரப்போகிறார், எங்கே போகிறார்.

2. மாமா போகிறார், காலம் போகிறது

3. சந்தைக்குப் போனேன், பயந்து போனேன்

4. அமைதி போய்விட்டது, நான் போய் விடுவேன்

5. விழப் போகிறது, புறப்படப் போகிறார்

10) தனி வினையடையாகஅமைந்த சொல்

1. வேகமாக 2.நடுவில் 3. தந்திரமாக 4. மெதுவாய் 5.சுவையாக

11)இடைவினையாகஇடம்பெறும் சொல்

1. இருப்பான் 2. எழுதுவார் 3. தின்பேன் 4. செய்வோம் 5. திறப்பாள்

12) உடம்படுமெய்ப்புணர்ச்சி விதிக்கு பொருந்தி வராதது

1. பட்டாடை 2. பலாவிலை 3. பூவரசு 4. பனையோலை 5. கிளியலகு

13)“ஆவது” என்னும்இடைச்சொல் குறைந்தபட்சம் என்னும் பொருள் உணர்த்துவது

1. பாணாவது இடியப்பமாவது சாப்பிடுவேன்

2. நீங்களாவது உதவி செய்யுங்கள்

3. நாம் எப்போதாவது சந்திக்கலாம்.

4. மழையாவது பெய்வதாவது

5. இரண்டாவது பரிசு

14) மரூஉ வழக்காகஅமைவது,

1. வாழ்நாள் 2. பாண்டியநாடு 3. அருமந்த 4. திகதி 5. பெயர்

15) பின்வருவனற்றுள்ஒல்லாந்த மொழிச் சொல்

1. தோம்பு 2. சராசரி 3. விருது 4. அன்னாசி 5. பட்டாளம்

16) இல் பொருள்உவமையாக அமையும் தொடர்

1. பெண்ணிலா ஊரில் பிறந்தாரைப் போல

2. உள்ளீடில்லாத பதர் போல

3. அழலருகே சேர்ந்த மலர் போல

4. விளக்கு மாற்றுக்குப் பட்டுகுஞ்சம் கட்டியது போல

5. உருள் பெருந்தேருக்கு அச்சாணி போல

17) மென்மையானசூடு என்ற பொருளைத் தரும் இரட்டைக் கிளவி

1. படபட 2. தளதள 3. கதகத 4. கசகச 5. பொலுபொலு

18) பின்வருவனவற்றுள்வழு வாக்கியம்

1. கழனிகளில் நெல் விளைந்திருந்தது

2. பாட்டி பனையோலையால் பாய் இழைத்தார்

3. ஒவ்வொரு பூவும் மலர்ந்தது.

4. இலங்கையின் கலாசாரம் உன்னதமானது

5. அவன் சிறிது நாட்களின் பின் திரும்பினான்

19) பின்வருவனவற்றுள்கூட்டுப் பெயராக வருவது

1. பொருளியல் 2. தொடர்ச்சி 3. ஏவுகணை 4. சமத்துவம் 5. ஏற்றுமதி

20) 'நீங்கள் பார்த்தஅல்லது நடித்த நாடகத்தைப் பற்றிக் கூறுங்கள்' என்னும் கூட்டு வாக்கியம் கொண்டமையும்தொடர்கள்

1. வினைத் தொடர்கள் 2. பெயரெச்சத் தொடர்கள்

3. பெயரடைத் தொடர்கள் 4. பெயர்த் தொடர்கள்

5. வினையடைத் தொடர்கள்

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments