படிப்பது கஷ்டமாக இருக்கிறதா? இலகுவாக படிக்க இதோ வழி

Report Print Amirah in கல்வி

நேர அட்டவணை போட்டு படிக்க துவங்குகள். அன்றைய தினம் என்னென்ன பாடங்கள் அட்டவணையில் உள்ளதோ, அதை அன்றே முடித்து விடுங்கள்.

படிக்கும் இடத்தில் சுவரிலோ அல்லது மேசை மீதோ இன்னின்ன பாடங்களை இதற்குள் படித்து முடிக்க வேண்டும் என்று அட்டவணை இட்டு, வாரம் ஒரு முறை அதைத் தேவைக்கு ஏற்ப மாற்றி வடிவமைத்து, இந்த பாடத்தை இந்த மணிக்குள் படித்து முடிக்க வேண்டும் எனத் தீர்மானம் செய்து கொள்ளுங்கள்.

அதன்படி திட்டமிட்டவாறு உரிய காலத்தில் படித்து முடிக்க வேண்டும் என்று மனத்திற்குள் தீர்மானம் செய்துவிட்டால் விரைவில் பாடங்கள் நினைவில் நிற்கும். அத்தோடு தூங்கும் முன் தன்னை தனே சுய ஆய்வு செய்துகொள்ளுங்கள்.

தினமும் காலை யோகா செய்யும் பழக்கத்தை கடைபிடிக்கலாம். இது மனதை அமைதியாக வைத்திருக்க உதவும். ஒவ்வொரு முறையும் படிக்கத் தொடங்குமுன் மனதை சமநிலைக்குக் கொண்டு வரும் பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

கண்களை மூடிக்கொண்டு ஓரிரு மணித்துளி விட்டுப் பிறகு படிக்கத் தொடங்கினால் சாதாரணமாக 1 மணி நேரத்தில் படித்து முடிக்கக் கூடியதை 15 மணித்துளிகளில் படித்து முடித்துவிட முடியும். இந்த ஓரிரு மணித்துளி பயிற்சி மூளைக்கு அடியில் உள்ள ஐபோதலாமஸ் சுரப்பியைத் தூண்டுவதால் பயன் ஏற்படுகிறது.

பாடத்தை குறிப்பெடுத்து படித்தால், ரிவைஸ் செய்வதற்கு உதவியாக இருக்கும். ஒரு பாடத்தை 2 அல்லது 3 முறை திரும்பி பார்த்தால் மட்டுமே, மனதில் நன்கு பதியும். படித்து முடித்த பின், எழுதிப் பாருங்கள். அது நீண்ட நாள் ஞாபகத்தில் பதிய வைக்கும். பெரிய வினாவை படித்தவுடனோ, எழுதியவுடனோ சிறிது இடைவெளி எடுக்கலாம்.

அது, மூளையை சோர்வடையாமல் காக்கும். தொடர்ச்சியாகப் பல மணி நேரம் படிப்பவர்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு மணித்துளி கண்களை மூடீ கண்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு மீண்டும் படிக்கத் தொடங்கலாம்.

உள்ளங்கையிலோ அல்லது கண் கிண்ணத்திலோ (Eye cup – இயற்கை மருத்துவ மனைகளில் கிடைக்கும்) தண்ணீரை எடுத்துக்கொண்டு விழிகளை அதில் நனைத்து, சுழ்ழவிட்டுக் கழுவலாம்.

இதனால் கண்களில் வெப்பம் குறைந்து புத்துணர்ச்சி பெறும். மேலும் கண் எரிச்சல் இருப்பின் கால் பாதங்களைக் குளிர்ந்த நீரில் நனைக்க வேண்டும்.

படிக்கும் நேரத்தில் வேறு சிந்தனைகளையோ, மனதில் ஓட்டாதீர். அமைதியான சூழலில் படியுங்கள். உங்கள் எண்ணம் சிதறாமல், கவனம் திசை திரும்பாமல் இருக்கும். தேர்வுக்காகப் படிக்கும் சமயங்களில் அங்கும் இங்கும் செல்வதையும், நேரத்தைப் பலியிடும் வெட்டிப் பேச்சுக்களையும் கட்டுப்படுத்துங்கள்.

அதிகம் படிப்பதால் சலிப்புத் தோன்றுமானால் சிறிதுத நேரம் வெளியில் நடந்து வரலாம். சற்று நேரம் தொலைக்காட்சி கூடப் பார்க்கலாம். ஆனால் தொலைக்காட்சி முன்பு உட்கார்ந்து விட்டால் அந்த மயக்கத்திலிருந்து விடுபட்டு எழ மணம் வராது. எனவே முடிந்தவை அதைத் தவிர்ப்பது நல்லது.

ஒரே நேரத்தில், இரண்டு வேலைகளை பார்க்கும் மனப்பான்மையை மாற்றுங்கள். ஒரு வேலையை செய்யுங்கள். அதை ஒரு மனதாக செய்யுங்கள். பிடிக்காத பாடத்தையும், விருப்பத்துடன் படிக்க பழகுங்கள். நடைமுறை வாழ்க்கையில் உள்ள சம்பவங்களுடன், ஒப்பிட்டு பாடங்களை படித்தால் எளிதில் புரியும்.

சிலருக்கு அதிகாலை படிக்க பிடிக்கும் சிலருக்கு நள்ளிரவு படிக்க பிடிக்கும். உங்களுக்கு எந்த நேரம் சரியாக உள்ளது என்று ஆராய்ந்து படிக்கவும். இரவில் நீண்ட நேரம் படிக்கும்போது உடலுக்குச் சத்தான உணவு தேவை. வேர்க்கடலையுடன் சிறிது வெல்லம் சேர்த்துத உண்ணலாம்.

அல்லது கடலை மிட்டாய் தின்றுவிட்டு நிரம்பத் தண்ணர் அருந்தினால் போதுமானது. ஆனால், இரவில் படிப்புக்கு இடையில் சோர்வு நீங்க கோப்பை கோப்பையாக்க் காப்பியும் தேநீரும் அருந்துவது நல்லதல்ல, பழச்சாறு, தேன் கலந்த நீர் மிகவும் ஏற்றது. அல்லது தண்ணீரே போதுமானது.

குழுவாக சேர்ந்து படியுங்கள் அப்போது நண்பர்களுடன் படித்ததை கலந்து ஆலோசிக்கலாம். அவ்வாறு செய்தால், அவர்களிடமிருந்து நாம் படிக்காத சில தகவல்களையும் பெறலாம். சந்தேகங்களையும் தீர்க்கலாம். படிக்கும் போது சேர்வு ஏற்படுவது குறையும்.

குழுவாக சேர்ந்து கற்கும் போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாடத்ததை தெரிவு செய்து அதை நன்றாக படித்து அதை மற்றவர்களுக்கு கற்பிக்கும் போது நன்றான மனதில் பதியும். அந்த பாடம் முடிந்தவுடன் அதில் உள்ள பிழைகளை திருத்தலாம். கலந்துறையாடலாம். இதன் மூலம் குறித்த பாடத்தில் உள்ள சந்தேகங்கள் தீரும்.

வீட்டில் அமர்ந்து படிக்கும் இடத்தை அடிக்கடி மாற்றாதீர்கள். ஒவ்வொரு நாளும் இடம் மாற்றினால் அந்தச் சூழ்நிலைக்கு மனம் பழகப்பட வேண்டும்.

படிக்கும் இடம், மேசை ஆகியவை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். சிலருடைய மேசைகளைப் பார்த்தால் தாறுமாறாக நோட்டுப் புத்தகங்கள் போட்டுக் கிடக்கும். அதைப் பார்த்தாலே மனம் வெறுப்படையும். எனவே அவற்றை எப்போதும் சீராக அடுக்கி வைய்யுங்கள்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments