சூரியக் குடும்பத்தின் ஒன்பது கோள்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

Report Print Printha in கல்வி

விண்வெளியில் இருக்கும் சூரியனையும், அதனைச் சுற்றி உள்ள ஒன்பது கோள்களையும் சூரியக் குடும்பம் என்று அழைக்கப்படுகிறது.

கோள்களை கிரகங்கள் என்றும் சூரியனை விண்மீன் மற்றும் நெருப்புக்கோளம் என்றும் அழைக்கின்றனர்.

சூரியன் அதிக வெப்பத்தை உமிழக்கூடியது என்றாலும், சூரியனின் துணையின்றி உலகில் உயிரினங்கள் வாழ முடியாது.

ஒன்பது கோள்களும் சூரியனை ஒரு மையமாகக் கொண்டு வெவ்வேறு நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றது. இப்போது நாம் சூரியனை சுற்றி வரும் கோள்களை பற்றி பார்ப்போம்..!

புதன்

கோள்களில் முதன்மையாக உள்ள புதன் கோளானது, சூரியனுக்கு பக்கத்தில் இருக்கிறது. இதனால் பகலில் இந்த கோளின் வெப்ப அளவு 800டிகிரி பாரன் ஹீட். ஆகவும், இரவில் அதற்கு எதிர்மறையாக -209 டிகிரி பாரன் ஹீட் அளவிற்கு கடுமையான குளிர்ச்சியாகவும் காணப்படுகிறது.

வெள்ளி

இரண்டாவது கோளாக உள்ள வெள்ளி சூரியக் குடும்பத்தில் மிகவும் வெப்பமான கோள் ஆகும். இதனால் இந்த கோளுக்கு ஈவ்னிங் ஸ்டார் என்று ஒரு பெயர் உள்ளது.&rc;&nc;இந்த வெள்ளி கோளானது, சூரியனைச் சுற்றி வர 225 நாட்களும், தன்னைத்தானே சுற்றிவர 243 நாட்களும் எடுத்துக் கொள்கிறது.

பூமி

சூரிய குடும்பத்தில் மூன்றாவது கோளான பூமியை நீலக்கோள் என்றும் அழைக்கப்படுகிறது. உயிரினங்கள் வாழக்கூடிய ஒரே கோள் பூமியாகும். இந்த பூமியானது, தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனைச் சுற்றிவர 365.24 நாட்கள் எடுத்துக் கொள்கிறது.

செவ்வாய்

சூரியனிடம் இருந்து கோள்களில் நான்காவதாக இருக்கும் செவ்வாய் கோளானது, சிவப்பு நிறத்தில் தோற்றமளிக்கும். கனிம வளங்கள் குறித்து ஆய்வு செய்வதற்கு 2014 ஆம் ஆண்டில் இந்திய விண்வெளி ஆய்வு மையம் ‘இஸ்ரோ’, மங்கள்யானை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது. மேலும் இந்த கோளில் அதிகமாக கார்பன் டை ஆக்சைடு நிறைந்துக் காணப்படுகிறது.

வியாழன்

சூரியக் குடும்பத்தில் உள்ள ஒன்பது கோள்களிலும் மிகப் பெரியக் கோளாக வியாழன் உள்ளது. பூமியில் ஏற்படும் புயலை விட, வியாழன் கோளில் மட்டும் ஆறு மடங்கு அதிகமாக புயல் வீசும் தன்மை காணப்படுகிறது.

சனி

சனிக் கோளானது, மிகவும் அழகான கோள் என்று அழைக்கப்படுகிறது. சூரியனிலிருந்து 1429 பில்லியன் கி.மீ. இடைவெளியில் உள்ளது. இந்த சனிக் கோளில் கணக்கிட முடியாத அளவுக்கு அதிகமான பனிக்கட்டிகள் மற்றும் தூசு படலம் நிறைந்துக் காணப்படுகிறது.

யூரேனஸ்

1781 ஆம் ஆண்டில் சூரியக் குடும்பத்தின் ஏழாவது கோளான யூரேனஸ் அறிவியியல் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கோளைச் சுற்றி அடர்ந்த கடல் நீலம் கொண்ட மீத்தேன் வாயு நிரம்பி உள்ளதால் நீல நிறமாகக் காட்சி தருகிறது.

நெப்டியூன்

சூரியக் குடும்பத்தின் எட்டாவது கோளான நெப்டியூன் யூரேனஸ் கோளைப் போன்றே நீல நிறத்தில் காணப்படுகிறது. இந்த கோளானது எப்போதும் 346 டிகிரி வெப்ப நிலையில் உறைந்துக் காணப்படும். மேலும் இந்த கோள் சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்கு 164 வருடங்கள் எடுத்துக் கொள்கிறது.

புளூட்டோ

சூரியக் குடும்பத்தின் ஒன்பதாவது கோளான புளூட்டோ குறுங்கோள் என்றும் அழைக்கப் படுகிறது. மற்ற கோள்களை விட இந்த கோள் அதிக குளிர்ச்சி தன்மை கொண்டதாக காணப்படுகிறது. மேலும் இந்த கோளானது, 1930 ஆம் ஆண்டு அறிவியல் அறிஞர்களால் கண்டு பிடிக்கப்பட்டது.

2/5

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments