அதிக முக்கியத்துவம் பெறும் பயோ டெக்னாலஜி துறை

Report Print Arbin Arbin in கல்வி

இந்த நூற்றாண்டில் தகவல் தொழில் நுட்ப துறைக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் துறையாக பயோ டெக்னாலஜி துறை விளங்குகிறது. இது குறித்த படிப்புகள் உலகம் முழுவதும் முக்கியத்துவம் பெற்று வருகின்றது.

பயோ டெக்னாலஜி என்பது உயிரியல் அமைப்புகளான மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் ஆகியவை பற்றிய படிப்பாகும். இந்த துறை உயிர் வேதியல், மரபியல், வேதியல், பொறியியல் போன்ற பல்வேறு துறைகளோடு தொடர்புடையது ஆகும்.

மருத்துவ துறையில் 70 சதவீத மருந்துகள் கடல் வாழ் உயிரினங்களில் இருந்து பயோ டெக்னாலஜி மூலம் தயாரிக்கப்படுகிறது.

ஸ்டெம் செல் டெக்னாலஜி, பயோ டீசல் போன்ற எண்ணற்ற பயன் பாடுகளுக்கு பயோ டெக்னாலஜி பயன்படுகிறது.

இந்த துறையை தேர்ந்தெடுக்க விருப்புபவர்களுக்கு கணிணி அறிவு அதிகம் தேவையாக உள்ளது. பனிரென்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றவர்கள் இந்த துறையில் சேர முடியும்.

இதில் இள நிலை படிப்பு மற்றும் முதுநிலை படிப்பு என இரு வகையான பட்ட படிப்புகள் உள்ளன. இதை முடிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பும் அதிக அளவில் உள்ளது.

ஐடி நிறுவனங்களில் பயோ டெக்னாலஜி படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் நிறைய உள்ளன. மல்டி டிரீட்மென்ட் மருத்துவமனைகளிலும் இந்த துறை சம்மந்தமான வேலை வாய்ப்புகள் கணிசமாக உள்ளது.

மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புகள் நிறைய உள்ளது. மேலும் அவுஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments