சுவாரசியம் நிறைந்த Architecture

Report Print Raju Raju in கல்வி

ஒரு அழகான பெரிய கட்டிடத்தை நாம் அண்ணாந்து பார்த்த படி அதன் அழகை ரசித்து விட்டு செல்கிறோம்.

அதன் அழகுக்கு பின்னால் இருப்பது ஆர்கிடெக்கின் திறமையும், உழைப்பும் தான்.

ஆர்கிடெக்சர் என்னும் படிப்பு கட்டடக் கலையை அடிப்படையாக கொண்டது ஆகும்.

இது முழுவதுமே கட்டிடங்களையும், இதர கட்டுமானங்களையும் பற்றிய படிப்பு தான்.

இந்த படிப்பினை தேர்ந்தெடுப்பவர்களுக்கு வரைதல், எழுதுதல் போன்றவற்றில் நல்ல ஆர்வம் இருக்க வேண்டும்.

எந்த ஒரு விடயத்தையும் புதிய கோணத்தில் பார்க்கும் திறன் இருப்பது கூடுதல் அம்சமாகும்.

மொத்தத்தில் உள்ளார்ந்த ஆர்வமும், நல்ல திறமையும் இந்த படிப்பை தேர்ந்தெடுப்பதில் அவசியமானதாக இருக்கிறது.

பேச்சுலர் ஆப் ஆர்கிடெக்சர் என்னும் இந்த படிப்பு 5 வருட இளநிலை படிப்பாகும்.

இதில் சேர +2 வகுப்பில் கணிதம், வேதியல்,இயற்பியல் பாடப்பிரிவை எடுத்து நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நுழைவு தேர்வு என்பது இந்த படிப்பில் சேர கட்டாயமானதாக இருக்கிறது.

நுழைவு தேர்வில் இரு பிரிவுகள் உள்ளது. பொது அறிவு வினாக்கள்,கட்டட வரலாறுகள் பற்றியெல்லாம் கேட்கப்படும். அடுத்த பிரிவில் வரைதல், கற்பனை திறனையெல்லாம் சோதிக்கும் டிராயிங் டெஸ்ட் நடத்தப்படும்.

திறமையான ஆர்கிடெக்சராக கல்லூரியை விட்டு வெளியில் வரும் பட்சத்தில் வேலை வாய்ப்புகளுக்கு பஞ்சமே இல்லை. முதலில் ஆரம்ப நிலை கட்டுமான நிறுவனத்தில் சேர்ந்து பணியை நன்கு கற்று கொள்ள வேண்டும்.

பின்னர் தனியே கட்டுமான நிறுவனத்தை கூட தொடங்கலாம்.

மத்திய மற்றும் மாநில அரசின் பொது பணி துறையிலும் கணிசமான வேலை வாய்ப்புகள் உள்ளது.

இப்போதெல்லாம் கட்டிடம் கட்டுபவர்கள் வடிவமைப்புக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். வணிக வளாகங்கள், தொழில் துறை ஐடி பார்க்குகள், அடுக்குமாடி

கட்டிடங்கள், பெரிய உணவகங்கள் போன்றவைகள் பெருகி வருவதால் ஆர்கிடெக்சர்களுக்கு வேலை இருந்து கொண்டே இருக்கும்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்