தமிழால் இணைவோம்: இலக்கணத்தின் வகைகள்

Report Print Raju Raju in கல்வி

இலக்கணம் என்பது ஒரு மொழியை தவறில்லாமல் கற்க பயன்படும் ஒரு விதிமுறையாகும். இந்த விதிக்கு கட்டுப்பட்டு தான் அந்த மொழிகள் இயங்கும்.

தமிழ் இலக்கணத்தில் ஐந்து வகைகள் உள்ளது

எழுத்து இலக்கணம்

மாறக்கூடிய வரி வடிவமாகவும், மாறாத ஒலி வடிவமாகவும் எழுதப்படுவதால் இது எழுத்திலக்கணம் எனப்படுகிறது. இதில் சந்தி இலக்கணமும் சேர்க்கப்படுகிறது. இரண்டு சொற்கள் சேரும் போது முதல் சொல்லின் கடைசி எழுத்திலும், இரண்டாம் சொல்லின் முதல் எழுத்திலும் வரும் வித்தியாசத்தை சொல்வதை குறிக்கும்.

சொல் இலக்கணம்

எழுத்து இலக்கணத்திற்கு அடுத்து எழுத்துக்களால் ஆன சொல்லின் இலக்கணம் கூறப்படுகிறது. எழுத்துக்களால் உருவானதாக இருந்தாலும் பொருள் தந்தால் மட்டுமே அது சொல் எனப்படுகிறது. சொல் இலக்கணம் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நான்கு வகைப்படுகிறது.

பொருள் இலக்கணம்

வாழ்விற்கு பொருள் தரும் கூறுகளை விளக்கி காட்டுவது பொருள் இலக்கணமாகும். அது அகப்பொருள், புறப்பொருள் என இரு வகையாக பிரிக்கப்படுகிறது. மனம் சம்மந்தமான விடயங்கள், ஒரு ஆணும் பெண்ணும் கொள்ளும் காதல் அகப்பொருளாகும். போர், வீரம், கொடை, கல்வி ஆகியவை புறப்பொருள் ஆகும்.

யாப்பு இலக்கணம்

யாப்பு என்பதற்கு புலவர்களால் செய்யப்படும் செய்யுள் என்பது பொருளாகும். செய்யுளின் அர்த்தம், ஓசை, அமைப்பு ஆகியவற்றை பற்றி விரிவாக கூறுவதே யாப்பு இலக்கணமாகும்.

அணி இலக்கணம்

அணி என்பதற்கு அழகு என்று பொருள். செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு, பொருளழகு போன்றவற்றை வரையறித்து கூறுவது அணி இலக்கணம் ஆகும்.

இலக்கியங்களில் உள்ள உவமை, உருவகம் முதலியவற்றுக்கு அணி என பெயரிட்டு அதை பர்றி அணி இலக்கணம் சொல்கிறது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments