யா சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர் ஒன்றியத்தின் கல்விக்கான பண உதவிதிட்டம்

Report Print Akaran Akaran in கல்வி

சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் “கற்றலுக்கு கைகொடுப்போம்”திட்டத்தின் கீழ் உள்ள தாய் தந்தையரை இழந்தோர், பெற்றோர் / பாதுகாவலர் இருந்தும் வறுமைகோட்டினுள் தவிக்கின்ற கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களை தமது“மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தில்”இணைத்து மாதாந்தம் கல்வி செலவினத்துக்கு 2500இலங்கை ரூபாவை2016August முதல் சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் 11 மாணவர்களுக்கு வழங்குவதற்கு ஒன்றியம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.

14.09.10அன்று சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் அதிபர் திரு.ந.சர்வேஸ்வரன் தலைமையில், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் முன்னிலையில் இத்திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

“மாணவர்களின் கல்விக்கான பண உதவி திட்டம்”2013ம்ஆண்டு ஒன்றியத்தினால்8 மாணவர்களுடன்ஆரம்பிக்கபட்டது.

இன்று இத்திட்டத்தின் மூலம் யா/ அ. த. க. பாடசாலை, கொடிகாமம் திருநாவுக்கரசுமாக வித்தியாலயம், கிளி/ஸ்ரீபூநகரிவிக்னேஸ்வரா வித்தியாலயம், சாவகச்சேரி இந்துக்கல்லூரி ஆகிய பாடசாலைகளை சேர்ந்த38 மாணவர்கள் உதவி பெறுகின்றனர்.

இம்மாணவர்களுக்கு Norway, Denmark, Canadaவில் வசிக்கும் இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த 28 குடும்பத்தினர் ஒன்றியத்தினுடாக உதவி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments