கடலில் பயணிக்க ஆசையா? இந்த படிப்பினை படியுங்கள்

Report Print Raju Raju in கல்வி

கடலில் பயணிப்பது என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சந்தோஷம், த்ரில் இருக்கவே செய்யும்.

அந்த கடல், கப்பல் சார்ந்தே நல்ல சம்பளத்துடன் நம் வேலை வாய்ப்பு அமைந்தால் எப்படி இருக்கும்? அது தான் Marine Engineering துறை !

வித்தியாசமான, சவாலான பணி, உலகை சுற்றும் பணிகள் இவையெல்லாம் மேற்கொள்ள எனக்கு விருப்பம் என்பவர்கள் இத்துறையை தேர்ந்தெடுக்கலாம். நல்ல சம்பளம், கொளரவமான வேலை என்பதால் இன்று இளைஞர்கள் மத்தியில் இத்துறை பிரபலமடைந்து வருகிறது.

Marine Engineering 4 ஆண்டுகள் பட்டபடிப்பு பிரிவில் உள்ளது. இந்த துறையில் படிக்கவேண்டுமெனில் பள்ளிபருவத்தில் நீங்கள், இயற்பியல், வேதியல், கணிதம் பாடங்களில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருப்பது அவசியமாகும்.

நல்ல உடல் தகுதியும், கண் பார்வை திறன் தெளிவாக இருத்தல் அவசியம்.

இந்த படிப்பை முடித்தவர்களுக்கு கப்பலில் இயந்திரம் பராமரிப்பு, இளநிலை பொறியாளர், தலைமை பொறியாளர் போன்ற பல வகையான தளங்களில் பணியாற்ற முடியும்.

இத்துறையில் பயிற்சியை முடிக்கும் முன்பே பணியில் அமர்த்தபடுகிறார்கள். மேலும் இத்துறையில் வெளிநாடுகளில் வேலை செய்ய அதிக இந்தியர்கள் தேர்ந்தெடுக்கபடுகிறார்கள்.

எல்லா துறைகளிலும் சம்பளத்தில் வருமான பிடித்தம் உண்டு. ஆனால் இந்த கடல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு வருமான பிடித்தம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments