அனிமேஷன் துறை: படிப்புகளும், வேலைவாய்ப்புகளும்

Report Print Raju Raju in கல்வி

திரைப்படங்கள், மொபைல் விளையாட்டுகள் என எல்லாமே 3D மயமாகி கொண்டிருக்கும் காலமிது!

இப்போது திரைப்படங்களில், தொலைகாட்சிகளில் அனிமேஷனின் பங்கு இன்றியமையாததாக இருக்கிறது என்றே கூறலாம்.

மருத்துவம், பொறியியல் போன்ற துறைகள் மட்டுமே நம்பிக்கையான, வேலைவாய்ப்பும் அதிகமுள்ள துறையாக மாணவர்கள், பெற்றோர் மத்தியில் உள்ள கண்ணோட்டம் தற்போது மாறி வருகிறது.

பல மாணவர்கள் தங்கள் விருப்பமான துறையாக அனிமேஷனை தேர்ந்தெடுத்து வருகிறார்கள் என்பதை உறுதி செய்யும் விதமாக இந்த துறையில் வேலை வாய்ப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன.

திரையில் உயிரோட்டமாக காட்டுவதற்காக உருவங்களை படைக்கும் கலைக்கு அனிமேஷன் என்று பெயர்.

கம்ப்யூட்டர் கேம்ஸ், கலையம்சமான படங்கள், பொப் வீடியோக்கள், 2D, 3D வெப் டிசைனிங் போன்ற பல வகையான மீடியாக்களில் இந்த அனிமேஷன் பயன்படுத்தபடுகிறது.

அனிமேஷன் துறையை தேர்ந்தெடுப்பவர்களுக்கு நல்ல படைப்பாற்றல் திறனும், எல்லா விஷயங்களையும் புதிய கண்ணோட்டத்தில் பார்க்கும் திறனும் இருக்க வேண்டும்.

அனிமேட்டரால் 2டி மற்றும் 3டி, VFX, Gaming, Graphic Designing, Web Designing என பல்வேறு தளங்களில் பணியாற்ற முடியும்.

அத்துடன் Product Reality, Medical Simulation, Military Simulation, Driving Simulation, Industry Simulation எனப் பல்வேறு துறைகளில் இப்போது அனிமேட்டர்களின் தேவை உருவாகியிருக்கிறது.

இத்துறையில் ஒரு மாத படிப்பில் இருந்து மூன்று ஆண்டு கால படிப்பு வரை பலவிதமாக உள்ளன.

நாம் விரும்பியவற்றை தெரிவு செய்து கொள்ளலாம். இதில் இளநிலை, முதுநிலை படிப்புகள் என இருவகையும் உள்ளது.

வீடியோ கேம்ஸ் ஏஜன்சி, விளம்பர தொழில்கள் சம்மந்தமான துறைகள், திரைப்பட துறைகள் போன்ற பல விதமான துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்