'Audio Engineering' பற்றி அறிந்து கொள்ளலாமா?

Report Print Fathima Fathima in கல்வி

இன்றைய காலகட்டத்தில் வாழ்வின் மிக முக்கியமான அங்கமாக மாறிவிட்டது சினிமா.

சினிமாவில் கொடிகட்டி பறக்க வேண்டும் என்ற ஆசையுடன் வலம் வரும் இளைஞர்கள் ஏராளம்.

இவர்களுக்கான வரப்பிரசாதமாக உள்ள துறை தான் Audio Engineering.

ஒலிப்பதிவு, மிக்சிங் மற்றும் ஒலியை உருவாக்குதலுக்கு பயன்படும் எந்திரங்கள் மற்றும் கருவிகளை திறம்பட பயன்படுத்துவது குறித்து கற்றுத்தரும் துறையாகும்.

தொலைக்காட்சி, வானொலி, ஒலி, ஒளி பரப்பிலும், இசை பதிவுகளிலும் இன்று Audio Engineers-ன் பங்கு பெருமளவில் உள்ளது.

Recording Studio-ல் பணிபுரியும் Audio Engineers, ஓடியோ உபகரணங்களை நிறுவி ஒலியை பதிவு செய்து, எடிட் செய்து, ஓடியோவை துல்லியமாக தேவைப்படும் விதத்தில் மாற்றி தருவதில் பெரும் பங்காற்றுகிறார்கள்.

Shooting Location-களில் ஒலியை பதிவு செய்பவர்கள் Field Audio Engineers என்று அழைக்கபடுகிறார்கள்.

மிக மிக நுணுக்கமான பணி என்பதாலும், நவீன கருவிகளை கையாள்வதாலும் இத்துறையில் நுழைய ஆடியோகிராபி என்னும் சிறப்பு படிப்பினை படிக்க வேண்டும், மேலும் இத்துறையில் வேலை வாய்ப்புகள் நிறைந்து காணப்படுகின்றது.

இத்துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் Studio, Film Studio, Multimedia Companies, Post Production Unit உள்ளிட்ட இடங்களில் பணியில் அமரலாம்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments