உங்களுக்கு தெரியுமா? ஆங்கிலத்தில் will/ Shall எதற்காக பயன்படுத்துகிறோம்

Report Print Printha in கல்வி

நமக்கு சில நேரங்களில் will/shall எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்ற குழப்பம் வரும்.

இதற்கான பதில் இதோ,

பொதுவாக I, we ஆகியவற்றுடன் shall இடம்பெறும். மற்றபடி he, she, it, they, you ஆகியவற்றுடன் will பயன்படுத்தப்படுகிறது.

மேலும் சில காரணங்களினால் இங்கு கூறப்பட்ட விதியில் மாற்றம் நிகழும்.

ஏனென்றால் will என்பது அழுத்தம் குறைந்தது.

எனவே less formal. "Have a nice week end" என்று கேட்டால் அதற்கு “I shall try” என்று கூறினால் சரியாக இருக்காது. இங்கு I will try என்பதே இயல்பாக இருக்கும்.

மூன்றாவது நபர் (he, she என்பதுபோல) தொடர்பான வாக்கியங்களில், shall என்பது தனி இடம் பெற்றுப் பயன்படுத்தப்படுகிறது. Ex: The Lessee shall remain the sole occupant of the house.

Will

எதிர் காலத்தில் நீங்கள் எதையாவது செய்வதாக சொன்னால் அப்போது will என்பதை பயன்படுத்த வேண்டும். Ex: I will stop smoking. That box looks heavy: I will carry it for you.

Shall

ஆலோசனை அல்லது அனுமதி பற்றி நீங்கள் கேட்கும் போது shall என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும். Ex: Shall I open the door? Shall we leave now?

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்