கல்லூரி VS பள்ளி! ஓர் அலசல்

Report Print Fathima Fathima in கல்வி

பள்ளி படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்குள் நுழையும் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ஆசைகள் மனதில் ஓடும்.

திரைப்படங்களை பார்த்து பார்த்தே பழகிப்போன இந்த காலத்து பசங்களுக்கு, எப்போதுடா நாம் கல்லூரிக்கு போவோம் என்ற ஏக்கம் இருக்கும்.

எப்போது பார்த்தாலும் படி, படி என்று சொல்லும் ஆசிரியர்கள் அங்கு இல்லை, தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்தாலும் யாரும் எதுவும் சொல்லப் போவதில்லை.

அதுமட்டுமா நாம் பெரிய ஆளாகிவிட்டோம் என்ற எண்ணமும் நமக்குள் வந்துவிடும். இப்படி ஜாலியாக இருந்தாலும், சில கஷ்டங்கள் அதில் இருக்கத்தான் செய்கிறது.

அரியர்

அரியர் வைக்காமல் படிப்பை முடித்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் போல, அப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது இன்றைய கால மாணவர்களின் நிலை. ஆனால் சில தேர்வுகளில் அரியர் வைத்துவிட்டு, அடுத்த செமஸ்டரில் எழுதும் போது கூடுதல் சுமையை தான் சுமந்து கொண்டிருக்கிறோம் என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம்.

காதல்

கல்லூரியில் எதிர் பாலினத்தவரோடு சற்று அதிகமாக பேசுவதற்கும், பழகுவதற்கும் வாய்ப்புகள் கிடைக்கலாம். நட்பாக பழகுவதை விட்டுவிட்டு, காதல் போன்ற விஷயங்களில் ஈடுபட்டால் படிப்பையும், எதிர்காலத்தையும் கட்டாயம் இழந்து நிற்போம்.

விடுமுறை

இதேபோன்று அடிக்கடி விடுமுறை எடுக்கும் பழக்கமும் மாணவர்களிடையே இருக்கிறது, ஒரு குறிப்பிட்ட அளவு விடுமுறையை தாண்டும் மாணவர்கள், அதற்கான அபராதத் தொகையை செலுத்தினால் மட்டுமே தேர்வு எழுத முடியும் அல்லது சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் சென்று ஒரு அபராதத்தொகை செலுத்தி, ஹால்டிக்கெட் பெறும் நடைமுறை இருக்கிறது.

மது, சிகரெட்

கல்லூரி வாழ்க்கையில் மது, சிகரெட் உட்பட தீய பழக்கவழக்கங்களை கொண்ட மாணவர்களை சந்திப்பது சகஜம். இத்தகைய மாணவர்களுடன், ஒரு அளவோடு பழக்கத்தை வைத்துக்கொண்டு உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

கல்லூரி வாழ்க்கையை ஒருவரது வாழ்வின் சொர்க்கம் என்று சொன்னால், அதில் மிகையில்லை. ஆனால் அந்த சொர்க்கத்தை நாம் எப்படி அனுபவிக்கிறோம் என்பதை வைத்தே நமது எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்