இருமொழி கல்விப்பிரிவு பிரிட்டிஷ் கவுன்சில் அனுசரணையுடன்

Report Print Thiru in கல்வி
145Shares

கல்வி அமைச்சின் இருமொழி கல்விப்பிரிவு பிரிட்டிஷ் கவுன்சில் அனுசரணையுடன் இருமொழிகள் - நிலைபேறான ஒரு சொத்து எனும் தலைப்பின் கீழ் தேசிய கல்வி நிறுவனத்தின் கல்வி அபிவிருத்திக்கான மீற்பே நிலையத்தில் மாநாடு ஒன்று நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன், கல்வி அமைச்சின் செயலாளர் டப்ளியூ.எம் பந்துசேன, கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஹேமந்த பிரேம திலக்க, தேசிய கல்வி நிறுவனத்தின் செயலாளர் நாயகம் வைத்தியர் ஜயந்தி குணசேகர, பிரிட்டிஷ் கவுன்சிலின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி கெய்ட் டாவிஸ், இங்கிலாந்து, எபர்டீன் பல்கலைக்கழகத்தின் பாடசாலை கல்விக்கான பேராசிரியர் டோ கொய்ல் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

பாடசாலைகளில் 2000ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இறு மொழிகளின் கற்கை செயற்பாட்டில் தரம் ஆறு தொடக்கம் உயர்தரம் வரை 5 பாடங்கள் ஆங்கில மொழியிலும் மிகுதியான பாடங்கள் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

இதனை எதிர்காலத்தில் தேசிய மட்டத்தில் அபிவிருத்தி செய்து மாணவர்களை உயர்கல்வி மேன்மை அடையச் செய்வதற்கும் சர்வதேசத்தில் எமது மாணவர்கள் மிளிர்வதற்கும் இச்செயற்பாடு உறுதுணையாக இருக்கும் என்ற நோக்கில் அபிவிருத்தி செய்யப்பட உள்ளது.

இந்த செயற்திட்டம் தொடர்பில் தொடர்ந்து 23, 24ம் திகதிகளில் நடைபெற்ற மாநாட்டில் கல்வி அமைச்சின் இரு மொழி கல்வி பிரிவின் அதிகாரிகள், கல்வி அமைச்சின் அதிகாரிகள், மாகாண மற்றும் வலய மட்டத்தில் இரு மொழி கல்விக்கான அதிகாரிகளும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் கலந்து கொண்டார்கள்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments