தெரிந்து கொள்வோம்- வயதானால் தோல் சுருங்குவது ஏன்?

Report Print Fathima Fathima in கல்வி

60 வயதை தாண்டி விட்டாலே தோல் சுருங்க ஆரம்பித்து விடும். வயது அதிகமாக அதிகமாக நம் உடலுக்குள் பல மாற்றங்கள் ஏற்படும்.

தோல் சுருங்கவும், தொளதொளன்னு தளர்ந்து போகவும் நிறைய காரணங்கள் இருக்கும்.

சிறு வயதில் நமது தோல் பகுதியில் கொலஜன்(Collagen) என்னும் புரதப் பொருள் நிறைய இருக்கும்.

தோல் மிருதுவா இருப்பதற்கு மட்டுமல்ல உறுதியாவும், நெகிழ்வுத் தன்மையுடனும் இருக்க இந்த கொலஜன் புரதம் தான் காரணம்.

வயது அதிகமாக அதிகமாக நமது தோல் பகுதிகளில் உள்ள கொலஜன் புரதத்தின் அளவும் குறைந்து கொண்டே வரும்.

மேலும் தோல் செல்களுக்கு இடையேயான இணைப்பும் பிணைப்பும் குறைந்து விடும்.

அதனால் வயதான பிறகு கை, கால், முகம் மற்றும் கழுத்து போன்ற பகுதிகளில் தோல்கள் தளர்ந்து போய்விடுகிறது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்