வெட்டுப்புள்ளி முறையில் புதிய நடைமுறை: அமைச்சரவை அனுமதி

Report Print Malar in கல்வி

பல்கலைகழகத்திற்கு மாணவர்களை தெரிவு செய்வதற்காக பயன்படுத்தப்படும் வெட்டுப்புள்ளி முறையில் புதிய நடைமுறை ஒன்றினை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அந்தவகையில் மாவட்ட ரீதியிலான முறைக்கு பதிலாக, பாடசாலை ரீதியில் வெட்டுப்புள்ளி பயன்படுத்தப்பட உள்ளதாக தெரியவருகின்றது.

தற்போது மாகாண, மாவட்ட மற்றும் பாடசாலை ரீதியில் அனைத்து மாணவர்களுக்கும் சமமான முறையில் கல்வியினை வழங்குவதில் பல்வேறு வேறுபாடுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாகவே இந்த புதிய நடைமுறையினை அறிமுகப்படுத்துவதற்காக கல்விமான்கள் உள்ளடங்கிய குழு ஒன்றினை நியமிப்பதற்கு கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும முன்வைத்த பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்