மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான மாணவர்கள் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி

Report Print Kumar in கல்வி

மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 53 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தி பெற்றுள்ளனர்.

அதில் ஒரு மாணவர் 193 புள்ளிகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

அதேபோன்று பட்டிருப்பு தேசிய பாடசாலையில் 30 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளதுடன் ப.பவுஸ்தினி எனும் மாணவி 193 புள்ளிகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இந்த நிலையில் களுதாவளை மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் 29 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான மாணவர்கள் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்