வரலாற்றின் முதல் தடவையிலேயே பாடசாலைக்கு பெருமை சேர்த்த மூன்று மாணவர்கள்

Report Print V.T.Sahadevarajah in கல்வி

சம்மாந்துறை வலயத்திலுள்ள மல்வத்தை சீர்பாததேவி வித்தியாலய வரலாற்றில் முதல் தடவையில் வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் படி மூன்று மாணவாகள் சித்தி பெற்றுள்ளனர்.

மாணவிகளான எஸ்.ஜினோதிகா (178 புள்ளி), ரி.விதுர்சனா (166 புள்ளி), ஆர்.தருணிகா (156 புள்ளி) ஆகியோரே இவ்விதம் பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இது தொடர்பில் பாடசாலை அதிபர் ரஜனி சிறியானந்தமூர்த்தி கூறுகையில்,

பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு கடந்த 5 ஆண்டுகளில் இம்முறை முதற்தடவையாக மாணவர்கள் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.

அவர்களுள் மூவர் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தி பெற்றுள்ளனர் என பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

தரம் ஒன்று முதல் தரம் ஐந்து வரையுள்ள இப்பாடசாலை 2015ஆம் ஆண்டு அப்போதைய கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணியால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்