வவுனியா புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தின் சாதனை

Report Print Thileepan Thileepan in கல்வி

2019ஆம் ஆண்டுக்கான 05ஆம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று பகல் வெளியாகின.

அந்தவகையில், வவுனியா புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தில் 32 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து சாதனை படைத்துள்ளனர். அத்துடன் இப் பாடசாலை மாணவி தரணியா விவேகானந்தராசா 192 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய 56 மாணவர்களில் 32 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

பாடசாலையின் அதிபர் கமலாம்பிகை சொக்கலிங்கத்தின் வழிநடத்தலில் ஆசிரியர்களான ச.மங்களவதனா, குவேனி ஆகியோர் மாணவர்களை வழிநடத்தியிருந்தனர்.

வவுனியா வடக்கு வலயத்தில் தொடர்ந்தும் ஆறாவது வருடமாக குறித்த பாடசாலை முதலிடத்தை தக்கவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்