வவுனியா வளாகத்தின் கல்விசெயற்பாடுகள் ஆரம்பிக்கபடும் திகதி அறிவிப்பு

Report Print Theesan in கல்வி

யாழ். பல்கலைழக வவுனியா வளாகத்தின் கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பிக்கபடும் என்று வளாகத்தின் முதல்வர் ரி.மங்களேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதேவேளை, நாட்டின் தென் பகுதியிலும், கிழக்கு மாகாணத்திலும் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பின் காரணமாக ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் வவுனியா வளாகத்தின் கல்வி செயற்பாடுகள் அனைத்தும் இடை நிறுத்தபட்டிருந்தன.

இந்நிலையில் எதிர்வரும் 6 ஆம் திகதி வளாகத்தின் கல்வி செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்