முதல் நிலையை எப்படி அடைந்தேன்! முதல் நிலை பெற்று சாதித்த மாணவியின் உறுதி

Report Print Kumar in கல்வி

வணிகத் துறையில் உயர்ந்த நிலைக்குச் செல்ல வேண்டும் என்பதே எனது இலக்காக இருந்தது என அண்மையில் வெளியான உயர்தரப் பரீட்சை பெறுபேற்றில் வணிகப் பிரிவில் 3A பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற மட்டக்களப்பு வின்சன்ட் மகளீர் உயர்தர தேசிய பாடசாலை மாணவி செல்வி.நவநீதன் கிருசிகா தெரிவித்துள்ளார்.

வணிகப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்த செல்வி ந.கிருசிகா ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,

தனக்கு வணிகப் பிரிவில் இருந்த விருப்பத்தால் தான் கல்வி பொது தராதர சாதாரணதரப் பரீட்சை முடிந்ததும் பெறுபேறு வெளியாகும் வரை aav க்கு சென்று கற்றேன். aav பரீட்சையில் தேசிய ரீதியாக முன்னிலை வகித்து சாதனை படைக்கக் கூடியதாக இருந்தது. அப்போதே எனக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டது.

உயர்தரப் பரீட்சையிலும் நல்ல பெறுபேற்றைப் பெறலாம் என்று. அதற்காக முயற்சித்தேன். அந்த முயற்சி எனக்கு வெற்றியைத் தந்துள்ளது. அதனால் மாவட்ட மட்டத்தல் என்னால் 3A முதலிடம் பெற முடிந்துள்ளது.

நான் இந்த நிலையை அடைவதற்கு எனக்கு பலர் ஆக்கமும் ஊக்கமும் தந்துள்ளனர். அந்த வகையில் இறைவனது ஆசியுடன் அனுசியா நவநீதன் ஆகிய எனது தாய் தந்தையர் கடுமையாக உழைத்தனர் இந்த நிலைக்கு ஆக்குவதற்கு அவர்கள் பெரும் அற்பணிப்புக்களைச் செய்துள்ளனர்.

அவர்களது ஒத்துளைப்பு இல்லாவிட்டால் என்னால் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது. அதே போன்று எனக்கு கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டிய பாடசாலை அதிபர் ஆகியோருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

குறிப்பாக இலங்கேஸ்வரன் மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகிய ஆசிரியர்கள் எனது வெற்றிக்கு அளப்பரிய பங்களிப்புச் செய்துள்ளனர். அவர்களது முயற்சியும் எனது இந்த வெற்றிக்கு காரணமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers