உயிரியல் தொழில்நுட்ப பிரிவில் மன்னார் மாவட்ட ரீதியில் முதலிடத்தை பெற்ற மாணவனின் இலக்கு

Report Print Ashik in கல்வி

சிறந்த மென்பொருள் பொறியியலாளராக வருவதே எனது எதிர்கால இலக்கு என உயிரியல் தொழில்நுட்ப பிரிவில் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தை பெற்ற மாணவன் றெஜி ராஜேஸ்வரன் றெயன்சன் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த 2018ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மன்னார், வங்காலை புனித ஆனாள் பாடசாலையின் மாணவன் றெஜி ராஜேஸ்வரன் றெயன்சன் உயிரியல் தொழில் நுட்பம் பிரிவில் 1ஆம் இடத்தினைப் பெற்றுள்ளார்.

குறித்த மாணவன் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தினையும், தேசிய ரீதியில் 483ஆம் இடத்தினையும் பெற்று மன்னார் மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார். இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில்,

சிறந்த மென்பொருள் பொறியியலாளராக வருவதே எனது எதிர்கால இலக்கு. மேலும் எனது கல்வி செயற்பாட்டிற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்