சிறந்த சட்டத்தரணியாக வருவதே எதிர்கால இலக்கு: வெற்றி தொடர்பில் கூறும் மேரி வினோதினி

Report Print Ashik in கல்வி

எதிர்காலத்தில் சிறந்த சட்டத்தரணியாக வருவதே தனது இலக்கு என க.பொ.த உயர்தர பரீட்சையில் மன்னார் மாவட்டத்தில் கலை பிரிவில் முதலாம் இடத்தை பெற்ற மாணவி ஜே.மேரி வினோதினி தெரிவித்துள்ளார்.

2018ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மன்னார், வங்காலை புனித ஆனாள் பாடசாலை மாணவி ஜே.மேரி வினோதினி, கலைப்பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளார்.

இந்த நிலையில் தனது வெற்றி குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

எதிர் காலத்தில் சிறந்த சட்டத்தரணியாக வருவதே எனது இலக்கு ஆகும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்