தமிழ் மாணவன் சாதனை! குவியும் பாராட்டுக்கள்

Report Print Kumar in கல்வி

மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மாணவன் அகில இலங்கை கர்நாடக சங்கீதப்போட்டியில் தேசிய ரீதியில் முதல் இடத்தினைப்பெற்று சாதனை படைத்துள்ளார்.

கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சினால் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட கர்நாடக சங்கீதப்போட்டியில் தனி இசையில் பங்குபற்றி மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் ஆரம்ப பிரிவு மாணவன் அருள்ஞானப்பிரகாசம் மேசாக்பிரசாத் முதல் இடத்தினைப்பெற்றுள்ளார்.

இதேவேளை, குறித்த மாணவனை இன்று பாடசாலையில் இந்துக்கல்லூரி அதிபர் இரா.சண்டேஸ்வரன், பிரதி அதிபர் எஸ்.பிரான்சிஸ், சங்கீத ஆசிரியர் தமயந்தி குகதாசன் ஆகியோர் கௌரவித்துள்ளனர்.

மேலும், பாடசாலை சமூகம் மற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவனுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்