கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்த ஜேர்மன் பல்கலைக்கழக மாணவர்கள்

Report Print Abdulsalam Yaseem in கல்வி

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவை, ஜேர்மன் பல்கலைக்கழக மாணவர்கள் சந்தித்துள்ளனர்.

குறித்த சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்படும் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் தொடர்பாகவும், சமூக ஒற்றுமை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும், ஜேர்மன் பல்கலைக்கழகத்தின் மாணவர் குழு, Dr.Christian Bauriedel தலைமையில் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers