கடும் நெருக்கடிக்குள் இலங்கை! திடீரென பணக்காரர்களான பாடசாலை மாணவர்கள்

Report Print Shalini in கல்வி

இலங்கையில் தற்போது கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், நாடளாவிய ரீதியில் ரயில் போக்குவரத்து 4ஆவது நாளாக ஸ்தம்பித்துப் போயுள்ளது.

இந்த நிலையில் மக்கள் மாணவர்கள் என அனைவரும் கடும் நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையை மாற்றுவதற்கு இலங்கை அரசியல்வாதிகள் பலர் பல முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர்.

அரச தரப்பிலிருந்தும் இந்த நிலையை மாற்றுவதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அந்த வகையில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் தமது வாகனங்களை கொடுத்து உதவி வருகின்றார்கள்.

இதனால் மாணவர்கள் சிரமப்படாமல் கார்களிலும், ஜீப் வண்டிகளிலும் மிகவும் பணக்காரர்களைப் போன்று மிகவும் மகிழ்ச்சியுடன் பாடசாலைக்கு செல்வதை காணக்கூடியதாக உள்ளது.

அந்த வகையில் இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, மற்றும் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க உள்ளிட்ட சிலர் தமது சொந்த வாகனங்களை கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...