பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நாடளாவிய ரீதியில் இன்று உயர்தர பரீட்சை ஆரம்பம்

Report Print Kamel Kamel in கல்வி
134Shares
134Shares
ibctamil.com

இன்றைய தினம் ஆரம்பமாக உள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்காக விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பரீட்சை இணைப்பு மத்திய நிலையங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளன.

பரீட்சை வினாத்தாள் மற்றும் விடைத்தாள் போக்குவரத்து செய்யப்படும் வாகனங்களுக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் முதல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1ம் திகதி வரையில் பரீட்சை நடைபெறவுள்ளது.

இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு 321469 பேர் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.

ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள், டிஜிட்டல் கருவிகள், செல்லிடப்பேசிகள் உள்ளிட்டனவற்றை பரீட்சை நிலையத்திற்கு எடுத்துச் செல்லக் கூடாது எனவும், மோசடிகள் முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் எனவும் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மலையகம்...

மலையகத்திலும் இன்று மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு செல்லக்கூடியதை எம்மால் அவதானிக்க முடிந்திருந்தது.

அந்த வகையில் ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் மாணவா்கள் ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு சென்றமையை காணக்கூடியதாக இருந்தது.

அத்தோடு பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மலையக செய்திகள் - திருமாள்

கிண்ணியா...

கிண்ணியா மத்திய கல்லூரி மாணவர்களும் இன்றைய தினம் க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு சென்றிருந்தனர்.

தங்களது பரீட்சை அனுமதி அட்டையுடன் பரீட்சை நிலையங்களுக்கு சந்தோசமாக சென்றனர்.

குறித்த பகுதியிலும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிண்ணியா செய்திகள் - ஹஸ்பர் ஏ ஹலீம்

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்