மன்னாரில் வகுப்பறை தொகுதிகள் திறந்து வைப்பு

Report Print Dias Dias in கல்வி
45Shares
45Shares
lankasrimarket.com

வட மாகாணத்தின் கல்வி அபிவிருத்திக்காக இந்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் பல வேலைத்திட்டங்களின் ஓர் அங்கமாக தற்போது இலங்கை ரூபா 250 மில்லியன் செலவில் 27 பாடசாலைகளை தெரிவு செய்து வகுப்பறை கட்டடங்களை அமைப்பதற்கான பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த திட்டத்தின் கீழ் ஏற்கனவே யாழ். மாவட்டத்தில் இரண்டு பாடசாலைகளிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு பாடசாலைகளிலும் அமைக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடங்கள் இந்திய துணைத் தூதுவராலும், வடமாகாண கல்வி அமைச்சராலும் இணைந்து திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இதன் அடுத்த கட்டமாக மன்னார் - பாலைக்குலி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையிலும், மன்னார் - பொற்கேணி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையிலும் மன்னார் - இலந்தைமொட்டை அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையிலும், மன்னார் - தட்சிணாமருத மடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலும் அமைக்கப்பட்ட வகுப்பறை தொகுதிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது வகுப்பறை தொகுதிகளை யாழ். இந்திய துணைத் தூதுவர் ச.பாலச்சந்திரன் மற்றும் வட மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இதில் கல்வித்துறை அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்