பாடங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது!

Report Print Kamel Kamel in கல்வி

பாடங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

பாடசாலை பாட விதானத்திலிருந்து வரலாறு, மொழி உள்ளிட்ட எந்தவொரு பாடமும் அகற்றப்படாது என கொழும்பு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

சில அரசியல்வாதிகள் பாடங்கள் குறைக்கப்பட உள்ளதாக பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பாடவிதானம் தயாரிக்கும் பணியில் அரசியல்வாதிகள் ஈடுபடுவதில்லை எனவும், கல்வியியலாளர்களே இதனைச் செய்வார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போலிப் பிரச்சாரங்களைச் செய்து கல்வியுடன் எவரும் விளையாடக் கூடாது என அவா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...