க.பொ.த சாதாரண தர, உயர்தர பரீட்சைகளுக்கு மேலதிக நேரம்

Report Print Ajith Ajith in கல்வி
94Shares
94Shares
ibctamil.com

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சைகளுக்கு மேலதிக நேரங்களை ஒதுக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்த இரண்டு பரீட்சைகளுக்கும் இரண்டாம் பாக வினாத்தாள்களின் விடைகளை அளிக்கும்போது மாணவர்களுக்கு மேலதிகமாக 10 முதல் 15 நிமிடங்கள் வழங்கப்படவுள்ளன.

மாணவர்கள் வினாத்தாள்களில் உள்ள வினாக்களை வாசிக்கவும் அதனை அது தொடர்பாக கிரகித்து கொள்ளவும் இந்த நேரம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டம் பெரும்பாலும் இந்த வருடத்தில் அமுல்செய்யப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்