உயிரியல் பிரிவில் முதலிடம் பிடித்த யாழ் மாணவனுக்கு கிடைத்துள்ள கௌரவம்!

Report Print Samy in கல்வி
775Shares
775Shares
ibctamil.com

கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த (உ.த) உயிரியல் பிரிவில் மூன்று பாடங்களிலும் திறமைச் சித்தி பெற்று மாவட்ட, மாகாண நிலையில் முதலாம் இடத்தைப் பெற்ற யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் மிகுந்தன் வக்சலன் ஜப்பான் பயணமாகிறார்.

கல்வி அமைச்சினால் இளையோர் விஞ்ஞான நிகழ்ச்சி திட்ட சக்குறா விஞ்ஞானம் என்னும் திட்டத்தினூடாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் மிகுந்தன் வக்சலன் ஜப்பான் பயணமாகிறார்.

கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த (உ.த) உயிரியல் பிரிவில் மூன்று பாடங்களிலும் திறமைச் சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும் தேசிய ரீதியில் 9ஆம் இடத்தையும் பெற்றுக்கொண்டவராவார்.

மிகுந்தன் - வக்சலன் சதுரங்கம், பூப்பந்து, கர்நாடக சங்கீதம், கணித ஒலிம்பியாட் போன்றவற்றில் திறமை காட்டியுள்ளார்.

ஜப்பான் விஞ்ஞான தொழில்நுட்ப நிறுவனத்தின் அனுசரணையுடன் ஜப்பான் சென்று அங்குள்ள விஞ்ஞான தொழில்நுட்பவியல், அறிவியல் விடயங்கள் பற்றியும் அவர்களது வாழ்க்கை முறை கலை,கலாசார விடயங்கள் பற்றியும் அறிந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிது.

இலங்கையில், வடமாகாணத்தில் இருந்து செல்லும் ஒரே ஒரு மாணவன் இவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்