பல்கலைக்கழக அனுமதிக்கான தமிழ் மொழிமூல கருத்தரங்கு

Report Print Thileepan Thileepan in கல்வி
63Shares
63Shares
ibctamil.com

பல்கலைக்கழக அனுமதிக்கான தமிழ் மொழிமூல வழிகாட்டல் கருத்தரங்கு யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.

வவுனியா வளாக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக் கருத்தரங்கில் உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்கள் பல்கலைக்கழகங்களை தெரிவு செய்தல், பாடங்களை இனங்காணல் தொடர்பான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.

வவுனியா வளாக முதல்வர் மங்களேஸ்வரன், சிரேஸ்ட உதவிப்பதிவாளர் ஆர்.ஜெயக்குமார், வவுனியா வளாக விரிவுரையாளர் ரி.கார்த்தீஸ்வரன், இரசாயனவியல் ஆசிரியர் ஏ.எஸ்.பரந்தாமன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு வழிகாட்டல்களை வழங்கினர்.

விண்ணப்பிக்கும் முறையே அவர்களது பல்கலைக்கழக அனுமதியைத் தீர்மானிக்கின்றது எனவும், சில மாணவர்கள் தவறாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதால் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காமல் போன சந்தர்ப்பங்களும் உள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்