புலமைப் பரிசில் பரீட்சை: 234 மாணவர்களின் புள்ளிகளில் மாற்றம்

Report Print Kamel Kamel in கல்வி
333Shares
333Shares
ibctamil.com

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் குறித்த மீள் மதிப்பீட்டில் 234 மாணவ மாணவியரின் புள்ளிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் சுமார் திருப்தியில்லாத 20000 மாணவ மாணவியர் மீள் மதிப்பீட்டுக்காக விண்ணப்பம் செய்திருந்தனர்.

இவர்களில் 234 மாணவ மாணவியரின் பரீட்சை பெறுபேறுகளில் குறிப்பாக புள்ளிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

புள்ளிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ள மாணவ மாணவியரின் பெறுபேறுகள் கல்வி அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், மீள்மதிப்பீட்டுக்காக விண்ணப்பித்து புள்ளிகளில் மாற்றம் ஏற்படா மாணவ மாணவியரின் விபரங்கள் அந்தந்த பாடசாலைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட மாணவ மாணவியருக்கு பிரபல பாடசாலைகளில் அனுமதி வழங்கும் நடவடிக்கைகள் இந்த மாத இறுதிக்குள் பூர்த்தியாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பாடசாலைகள் கிடைக்கப்பெறாத மாணவ மாணவியர் எதிர்வரும் மாதம் 15ம் திகதி வரையில் மேன்முறையீடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்