எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்காமையால் யாழ். மாணவன் தற்கொலை முயற்சி

Report Print Vethu Vethu in கல்வி
378Shares
378Shares
ibctamil.com

உயர்தர பரீட்சையில் தான் எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைக்காமையினால் மனவிரக்தியடைந்த மாணவன் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

யாழ்ப்பாணம், வடமராட்சி பிரதேசத்தை சேர்ந்த மாணவன் ஒருவர் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இதன்போது அவர் உடனடியாக மானிப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வணிக பிரிவில் பரீட்சை எழுதிய குறித்த மாணவர் நேற்று மாலை இவ்வாறு விஷமருந்தியுள்ளார்.

அவர் தனது நண்பர்களை விடவும் குறைவான சித்தி பெற்றமையினால் மிகவும் கவலை அடைந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை மாணவனின் அறையில் இருந்து சத்தம் ஒன்று கேட்டுள்ளது. உள்ளே சென்று பார்க்கும் போது அவர் வாந்தி எடுத்துக் கொண்டிருந்ததாக மாணவனின் தந்தை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அவர் அருந்திய விஷம் ஆபத்தானது அல்ல என்பதனால் மாணவனின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

வடமராட்சி பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்