வட்டு. யாழ்ப்பாணக் கல்லூரி மாணவர்களின் சிறந்த பெறுபேறு! பலருக்கு 3A சித்திகள்

Report Print Vethu Vethu in கல்வி
844Shares
844Shares
ibctamil.com

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ள நிலையில் மாவட்ட மட்ட ரீதியாக சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் விபரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியை சேர்ந்த நான்கு மாணவர்கள் 3A சித்திகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்ந்துள்ளனர்.

பெளதீக விஞ்ஞானத்தில் மாணவன் பிரபாகரன் பிரதீஸ் 3A சித்தியை பெற்றுள்ளார். இவர் மாவட்ட மட்டத்தில் 8ஆவது நிலையையும் தேசிய ரீதியில் 77ஆவது நிலையையும் பெற்றார்.

பெளதீக விஞ்ஞானத்தில் மாணவன் விக்டர் ஜெயக்குமார் வசந்த் கோட்ப்ரே 3A சித்தியைப் பெற்றுள்ளார். இவர் மாவட்ட மட்டத்தில் 21ஆவது இடத்தையும் தேசிய ரீதியில் 248ஆவது நிலையையும் பெற்றார்.

வணிகப் பிரிவில் மாணவி அஸ்வினி ஸ்கந்தராஜா 3A சித்தியைப் பெற்றுள்ளார். இவர் யாழ். மாவட்ட மட்டத்தில் 37ஆவது நிலையைப் பெற்றார்.

வணிகப் பிரிவில் மாணவி அனோஜா சத்தியசீலன் 3A சித்தியைப் பெற்றுள்ளார். இவர் யாழ் மாவட்ட மட்டத்தில் 45ஆவது நிலையைப் பெற்றார்.

இதேவேளை அகில இலங்கை ரீதியாக பௌதீக விஞ்ஞான பிரிவில் யாழ். ஹாட்லி கல்லூரி மாணவரான ஸ்ரீதரன் துவாரகன் முதலிடம் பிடித்துள்ளமை சிறப்பம்சமாகும்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்