பல்கலைக்கழக மாணவர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு!

Report Print Navoj in கல்வி
59Shares
59Shares
ibctamil.com

பல்கலைக்கழக மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு கொடுப்பனவு இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் அனுசரனையுடன் தொழிற்படும் மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பினால் வழங்கப்பட்டுள்ளது.

இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் அனுசரனையுடன் தொழிற்படும் மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் பெண்கள் வலுவூட்டல் செயத்திட்டத்தின் கீழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்பட்ட நிகழ்வு மட்டக்களப்பு ப.நோ.ச.கட்டட மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை பகல் இடம்பெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை, வெல்லாவெளி, பட்டிப்பளை, கிரான், வவுணதீவூ, வாழைச்சேனை ஆகிய ஆறு பிரதேச செயலகப் பிரிவுகளில் நலிவுற்ற குடும்பங்களில் இருந்து பல்கலைக்கழகம் தெரிவான மிகவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் வாழும் மாணவர்களை கிராமமட்ட பெண்கள் குழுக்களின் அனுசரனையுடன் இவ் ஊக்குவிப்புகள் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் இணைப்பாளர் ஐி. தர்சினி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் 61 பின்தங்கிய நிலையில் வாழும் குடும்பங்களில் உள்ள பல்கலைக்கழகம் கற்கும் மாணவர்களுக்கு தலா 5000 ரூபா படி 59 மாணவர்களுக்கு காசோலையாக இவ் உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் பிரதம அதிதியாகவும் மற்றும் இளைஞர் அபிவிருத்தி அகத்தின் மாவட்ட இணைப்பாளர் த.திலீப்குமார், அருவி பெண்கள் வலையமைப்பின் உத்தியோகத்தர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் பங்கு கொண்டனர்.

இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அருவி பெண்கள் வலையமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பணியாற்றி வருவதுடன் குறித்த நிலையில் உள்ள குடும்பங்களில் வாழும் மாணவர்களுக்காக கல்வி உதவி வழங்கி வருகிறது.

இங்கு கருத்துத் தெரிவித்த இளைஞர் அபிவிருத்தி அகத்தின் மாவட்ட இணைப்பாளர் த.திலீப்குமார்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் பலர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அவர்களின் அபிவிருத்தி மேம்பாடு, பாதுகாப்பு போன்றவை தொடர்பில் கரிசனை கொள்ள வேண்டிய கடைப்பாடுகளும் பொறுப்புக்களும் அனைவருக்கும் உண்டு.

பெண்கள் தங்களை தாங்களே மேம்படுத்தவும் பெண்களின் ஆளுமை திறனை வளர்க்கவும் கிராமப்புற பெண்கள் தலைமைத்துவ ரீதியாக தொழிற்படவும் இதற்கான சந்தர்ப்பங்களையும் வாய்ப்பையும் ஏற்படுத்தும் வகையில் மாவட்ட பெண்கள் வலையமைப்பு உருவாக்கப்பட்டு மிகவும் பின்தங்கிய இடங்களில் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னேடுத்து வருகின்றது.

இவற்றுக்கு ஒவ்வொரு பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சிறப்பான பங்களிப்பை மேற்கொள்கின்றனர். பெண்களை கல்வித் துறையில் மேம்படுத்தும் வகையில் பல்கலைக்கழக மாணவர்கழுக்கான கல்வி ஊக்குவிப்பு கொடுப்பனவு இன்று எம்மால் வழங்கப்படுகின்றன என்று தெரிவித்தார்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்