10 மாதங்களின் பின் மாணவர்கள் எடுத்துள்ள தீர்மானம்

Report Print Ajith Ajith in கல்வி
86Shares
86Shares
ibctamil.com

மருத்துவ பீட மாணவர்கள் 10 மாதங்களின் பின்னர் விரிவுரைகளில் பங்கேற்க தீர்மானித்துள்ளனர்.

எதிர்வரும் 20ஆம் திகதி முதல் விரிவுரைகளில் பங்கேற்க தீர்மானித்துள்ளதாக மருவத்துவ பீட மாணவர் செயற்பாட்டு குழுவின் இணைப்பாளர் ரயன் ஜயலத் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு இடம்பெற்ற மருத்துவபீட மாணவர் சங்கத்தின் செயற்பாட்டு குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி பிரச்சினை காரணமாக கடந்த 10 மாதங்களாக மருத்துவ பீட மாணவர்கள் விரிவுரைகளை புறக்கணித்திருந்ததமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்