புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களே பல்கலைக்கழகம் தெரிவாகின்றனர்!

Report Print Kamel Kamel in கல்வி
75Shares
75Shares
ibctamil.com

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடையாத மாணவ, மாணவிகளே அதிகளவில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகின்றனர் என தென் மாகாண முதலமைச்சர் சான் விஜயலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.

காலி பாடசாலையொன்றில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர் தொகையை விடவும் சித்தி அடையாத மாணவர் தொகை அதிகமானது.

பரீட்சைத் திணைக்களத்தினால் நடத்தப்படும் முக்கியமான பரீட்சைகளில் ஒன்றே புலமைப் பரிசில் பரீட்சையாகும்.

புலமைப் பரிசில் பரீட்சைக்காக பெற்றோர் அதிக சிரத்தை எடுத்துக் கொள்கின்றனர். எனினும் புலமைப் பரிசில் பரீட்சையின் பின்னர் அவ்வாறு கவனம் செலுத்துவதில்லை.

பிள்ளைகளின் கல்வியில் எந்த நேரத்திலும் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும்.

புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடையாத காரணத்தினால் மாணவர்கள் தைரியத்தை இழந்து விடக் கூடாது.

புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடையாத மாணவ, மாணவியரே சாதாரண தரம், உயர்தரம் மற்றும் பல்கலைக்கழகங்களில் ஜொலிக்கின்றனர்.

கொழும்பு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் போது புலமைப் பரிசில் பரிசில் பரீட்சையில் தோல்வியடைந்த மாணவ, மாணவியரே அதிகளில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகின்றனர் என தெரியவந்துள்ளது.

மாணவர்கள் ஒழுக்கத்தை பேணுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்