மட்டக்களப்பில் கற்றல் திறனும் உள்ளார்ந்த ஆற்றல்களும் எனும் பயிற்சி புத்தகம் வழங்கி வைப்பு

Report Print Rusath in கல்வி

பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பகுதியில் புலமைபரிசில் பரீட்சை எழுதவிருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட 300 மாணவர்களுக்கான விசேட கற்றல் பயிற்சிகளை இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு முன்னெடுத்து வருகின்றது.

இவ்விசேட கற்றல் பயிற்சிக்காக தயாரிக்கப்பட்ட "கற்றல் திறனும் உள்ளார்ந்த ஆற்றல்களும்" எனும் பயிற்சி புத்தகம் உத்தியோகபூர்வமாக நேற்று(27) வெளியிட்டு வைக்கப்பட்டது.

இதன் போது இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இராசமாணிக்கம் சாணக்கியன், பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் ந.புள்ளநாயகம், கோட்டக்கல்வி பணிப்பாளர் பூ.பாலச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

பரீட்சை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட இம் மாணவர்களுக்கான பயிற்சி புத்தகத்தினை, வலயத்தின் ஆரம்பக் கல்விக்கு பொறுப்பான பிரதி கல்விப் பணிப்பாளர் வரதராஜன் தலைமையிலான அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் குழு தயாரித்திருந்தது.

மேலும் 300 மாணவர்களுக்கும் பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட்டு பயிற்சி வகுப்புக்கள் கட்டம், கட்டமாக நடைபெற இருப்பதாகவும், இதற்காக சுமார் நான்கு இலட்சம் ரூபாவிற்கு மேல் செலவு செய்துள்ளதாகவும் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...