கொரானா எதிரொலி...45 நிமிடங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட வணிகம்: பங்குச்சந்தை மேலும் சரிவு !

Report Print Kavitha in பொருளாதாரம்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸின் எதிரொலியால் கடந்த இரு வாரங்களாக பங்குச்சந்தைகள் தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன.

இந்நிலையில் இன்றைய வணிக நேரத் தொடக்கத்திலேயே இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

அதில் மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் மூவாயிரத்து 214 புள்ளிகள் சரிந்து 29 ஆயிரத்து 565 ஆக இருந்தது ஓரளவு மீட்சியடைந்து மூவாயிரத்து 91 புள்ளிகள் சரிந்து 29 ஆயிரத்து 687 ஆக இருந்தது.

அதுமட்டுமின்றி தேசியப் பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு நிப்டி 966 புள்ளிகள் சரிந்து எட்டாயிரத்து 624 ஆக இருந்தது.

மேலும் இரண்டு பங்குச்சந்தைகளிலும் பத்து விழுக்காட்டுக்கு மேல் சரிவு ஏற்பட்டதால் அவற்றின் வணிகம் 45 நிமிடங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் பொருளாதாரம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்