கொரோனாவால் முதல் இடத்திலிருந்து இரண்டாம் இடத்திற்கு சென்ற முகேஷ் அம்பானி! ஒரே நாளில் 500கோடி காலி

Report Print Abisha in பொருளாதாரம்

கொரோனாவால் ஏற்பட்ட பங்கு சந்தை வீச்சியால் முகேஷ் அம்பானி 500 கோடி சொத்துக்களை இழந்துள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி, சவுதி அரம்கோ நிறுவனத்தில் பார்ட்னராக உள்ளார். கொரோனா தொற்றால், உலநாடுகளில் உள்ள பங்கு சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டதை அடுத்து அரோம்கோ நிறுவனமும் வரலாறு காணாத அளவில் 320 பில்லியன் டொலர்களை இழந்தது.

இரண்டு நாட்களாக அராம்கோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 320 பில்லியன் டொலர்கள் என்று குறைந்ததால் முதலீட்டாளர்கள் நம்பிக்கையை இழந்தனர். இதன் மூலம் 3டிரில்லியன் டொலர் மதிப்பிடப்பட்ட சவுதி அராம்கோ தற்போது வெறும் 1.4டிரில்லியன் டொலருக்கு மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாக இருந்தாலும், 2.88 லட்சம் கோடி ரூபாய் கடனில் இருந்து வருகிறது. இதனை சமாளிக்க முகேஷ் அம்பானி, இதற்கு ஈடாகப் புதிய வர்த்தகங்களில், அதாவது, ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரீடைல் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இதனிடையே ரிலையன்ஸ் இண்டஸ் ரீஸ் நேற்றைய வர்த்தகம் சரிந்ததில், ஒட்டுமொத்த முதலீட்டாளர்களையும் கதி கலங்க வைத்து உள்ளது.

இதனால், அம்பானியின் சொத்து மதிப்பு 7.8 பில்லியன் டொலர் அளவிற்கு கடுமையாக சரிந்துள்ளது. கடந்த ஆண்டு ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட அறிக்கையின்படி, 50 பில்லியன் டொலாராக இருந்த முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு தற்போது 42.2 பில்லியன் டொலாராக இருந்துள்ளது. இந்த நிலையில், தற்போது, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பில் 56,000 கோடி ரூபாய் இதன்மூலம் காணாமல் போயுள்ளது

இதனால், ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற இடத்தை இழந்து இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார் முகேஷ் அம்பானி.

மேலும் பொருளாதாரம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்