கொரோனா வைரஸால் சர்வதேச அளவில் பொருளாதார பாதிப்பு : உச்சம் தொட்ட தங்கம் விலை..!

Report Print Kavitha in பொருளாதாரம்
275Shares

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவில் தொழில்துறைகள் முடங்கி ஏராளமான நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.

தொழிற்சாலைகளில் உற்பத்தி இல்லை. இதன் எதிரொலியாக சர்வதேச அளவில் பங்குச்சந்தைகளிலும் சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருகின்றது.

கடந்த வாரத்திலிருந்தே தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் தங்கத்தின் விலையானது, தொடர்ந்து ஏழு சந்தை தினங்களாகவே ஏற்றம் கண்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமையன்று அவுன்ஸூக்கு 1615.85 டொலர்களாக அதிகபட்சம் வர்த்தகமாகிய நிலையில், இன்று காலையில் 1.612.95 டாலர்களாக தொடங்கியுள்ள நிலையில், தற்போது 1,612.15 டொலர்களாக வர்த்தகமாகி வருகிறது.

கடந்த இரண்டு தினங்களில் மட்டும் தங்கம் விலை 700 ரூபாய்க்கு மேல் ஏற்றம் கண்டு வருகின்றது.

தங்கத்தின் விலையினை போலவே வெள்ளியின் விலையும் கடந்த இரண்டு தினங்காகவே, தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது.

அதுமட்டுமின்றி தற்போது 250 ரூபாய் அதிகரித்து வெள்ளியின் விலை 47820 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.

இதே போல் சர்தேச சந்தையிலும் 0.28% அதிகரித்து 18.363 டொலர்களாக வர்த்தகமாகியும் வருகின்றது

இதன் அடிப்படையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.31,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.15 உயர்ந்து ரூ.3,980-க்கும், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.30 காசுகள் உயர்ந்து ரூ.52.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் பொருளாதாரம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்