அடுத்த 10 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியில் இந்த நாட்டுக்கே முதலிடம்: ஆய்வில் தகவல்

Report Print Raju Raju in பொருளாதாரம்

உலகில் அடுத்த 10 ஆண்டுகளில் மிக வேகமான பொருளாதார வளர்ச்சியை காணும் நாடுகளில், இந்தியா முதலிடம் பிடிக்கும் என தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின், சர்வதேச மேம்பாட்டு மையத்தின் ஆய்வறிக்கையில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்தியா, வியட்நாம் போன்ற நாடுகள் ஏற்றுமதியை பரவலாக்குவதில் தீவிரம் காட்டி வருகின்றன.

இதோடு புதிய ரசாயனங்கள், வாகனங்கள், சில வகை மின்னணு சாதனங்கள் போன்ற நுண்ணிய தொழில்நுட்பங்கள் சார்ந்த துறைகளை அதிகளவில் ஏற்றுமதியில் இணைத்து விரிவுப்படுத்துவதிலும் ஆர்வம் காட்டுகின்றன.

இதன் காரணமாக அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா, ஆண்டுக்கு 7.9 சதவீத பொருளாதார வளர்ச்சியுடன் உலகளவில் முதலிடத்தை பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது.

சீனா, அமெரிக்கா, பிரான்ஸ் ஆகியவை முறையே 4.9 சதவீதம், 3 சதவீதம் மற்றும், 3.5 சதவீதம் வளர்ச்சி காணும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொருளாதாரம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்